வெற்றிக்கொடி கட்டு
நிலாவைத்தொட்ட இந்தியா சாதனை படைத்த தினம் 2008 நவம்பர் 14. சந்திரனில் தடம்பதித்ததில் ஐந்தாவது ரேங்க் நமக்கு.
அமெரிக்கா, ரஷ்யா பெரியண்ணன்கள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் நிலவுப்பாதையை நெருங்கியதும் வழுக்கி வேறுதிசை சென்ற அனுபவம் பல. நாம் அக்.22ல் துவங்கிய பயணம் நவ.14ல் நிலவின் தென்துருவத்தில் ஷாகில்டன் குழியில் நிலவு உளவுக்கருவியை இறக்கியதுவரை ஒரே ஷாட்டில் சிக்சர்.
புவிஈர்ப்பு பாதையிலிருந்து விலகி சந்திரனின் ஈர்ப்புப்பாதைக்கு செல்லும்போது சந்திரயானின் வேகம் குறைக்கப்பட்டு சந்திரன் ஈர்ப்பு,சுழற்சிக்கேற்ப மேட்ச்சிங் செய்ய ஜோ&சூ ஜோடிபோல விண்வெளியில் இப்போது சந்திரனும், சந்திராயனும். நிலவுப்பாதைக்கு சென்றதும் நவ.14ல் நிலவு உளவுக்கருவி மிப்பை கழற்றிவிட்டு அரைமணிநேரத்திற்குள் நிலவில் பத்திரமாக இறங்கி ஆய்வு நடத்திவருகிறது.
மிப் கலயத்தின் நான்கு பக்கங்களில் வரையப்பட்ட நமது தேசியக்கொடி நிலவில் தடம்பதித்துள்ளது. 1999ல் துவங்கிய சந்திரன்ஆய்வு திட்டத்தை 9ஆண்டுகளில் சாத்தியமாக்கியிருக்கும் இஸ்ரோ ஞானிகளுக்கு ஹேட்ஸ் ஆஃப்.
அடுத்த நிதியமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பால் வியாழனில் கண்முழித்த காளை வெள்ளியில் வெளியேற்றப்பட்டது. சனி, ஞாயிறுகளில் சந்தையை குளிர்வித்த செய்திகள் பல. ரிசர்வ்வங்கி அளித்துள்ள சலுகைகள், பெட்ரோல்,டீசல் விலைகுறைப்பு, பிரதமர் அறிவித்துள்ள ரூ.32ஆயிரம் கோடி சலுகைத்திட்டங்கள் சந்திரனில் படர்ந்த தேசியச்சின்னம் போல சந்தையில் தடம்பதிக்க வாய்ப்பு.
Monday, December 8, 2008
Subscribe to:
Posts (Atom)