Saturday, August 23, 2008

வாஜி...வாஜி...3ஜி.


தன்னுடைய சக்தி தன்னிலிருந்து வெளியே வியாபிக்க, அந்தச்சக்தியிலிருந்தே சிருஷ்டிகள் உண்டாயின.
சித்தவேதம்.
தகவல் தொழில்நுட்பத்தின் முக்கிய சிருஷ்டியாக இந்தியாவில் அறிமுகமாயிருப்பது ஐபோன் அமெரிக்க ஆப்பிளின் விசேஷ தயாரிப்பு, உலகம் முழுவதும் க்ரீமி மக்களின் கைப்பிள்ளை.
நம்நாட்டில் ஏர்டெல், வொடாபோன் இரண்டும் ஐபோன் விற்பனையை துவக்கியுள்ளன. 8ஜிபி நினைவுத்திறனுடன் விலை ரூ.31ஆயிரம், 16ஜிபி ரூ.36ஆயிரம். வொடாபோன் சுலபத்தவணையில் வாங்கலாம் என்று அறிவித்துள்ளது.

ஐபோனின் சிறப்பே அதன் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம்தான். தகவல்தொடர்பு துறையில் முதல் தலைமுறை தொழில்நுட்பம் கம்பிவழியிலானது. இரண்டாம் தலைமுறை அலைவரிசை அடிப்படையிலானது. மூன்றாம் தலைமுறை டிஜிட்டல் மயமானது. தயாராகிவரும் நான்காம் தலைமுறை வயர்லெஸ் உலகத்திற்கானது.

ஐபோனை எதிர்கொள்ள நம்.1நோக்கியா தயாராகிவிட்டது. ஐபோனைப் போன்ற வசதிகளுடன் 32ஜிபி நினைவுத்திறன் இலவச டவுன்லோடுடன் என்92 மாடலை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை ஐபோனுக்கு சமம்.

சீன தயாரிப்புகளின் விலையும் மளமளவென சரிந்து வருகிறது. ப்ளூடூத் வசதியுடன் சீனத்தயாரிப்பான க்ரே போன் உங்கள் ஊரில் 3ஆயிரத்துக்கு கிடைக்கும். நோ கேரண்டி, வாரண்டி.
ஐபோன் வருகையால் 3ஜி தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து தொழில்களும் பிரபலமாகும். குறிப்பாக மீடியா, விளம்பரம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஎம்ஐ மொபைல் செல்வழி விளம்பர நிறுவனங்களில் முன்னணி வகிக்கிறது. ஐரோப்பா, அமெரிக்க நிறுவனங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறது.
=====

அம்பானி சகோதரர்களுக்குள் கேஸ் சப்ளை தொடர்பான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்புக்குரியது. தொழில்குடும்ப உறுப்பினர்களிடையே பிணக்கு ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அப்பிரச்னைக்கு குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களைக்கொண்டே தீர்வுகாண வேண்டும்.
ஒரு தொழிற்குடும்பத்தின் பிரச்னையால் அதைச்சார்ந்துள்ள குடும்பங்கள் நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவுறுத்தும் விதமாக தீர்ப்பு அமைந்துள்ளது. மறைந்த பிக்அம்பானியின் துணைவியார் கோகிலாபென்னைக் கொண்டே இப்பிரச்னைக்கு தீர்வுகாண நீதிமன்றம் கூறியுள்ளது.
=========
பணவீக்கத்தை அரசியல்வாதிகளால் தடுக்க முடியாது என்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. கடந்தவியாழன் வெளியான புள்ளிவிவரப்படி பணவீக்கம் 12.63%. இரண்டுவாரங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்து தற்போது தெரியவந்துள்ளதாகவும், அடுத்தடுத்தவாரங்களில் வீக்கதரிசனம் தொடரும் என்றும் ஆய்வுப்புலிகள் கிலி கொள்ள வைக்கின்றனர்.

பணம் வீங்கவீங்க அதன்பாதிப்பு சந்தையில் நிச்சயம் இருக்கும். சிறிய முதலீட்டாளர்கள் சந்தையை புறக்கணிக்காமல் தங்களுக்கு சாதகமாக நிலைமையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

No comments: