நோ..நோ டாடா! வேண்டும் நானோ!!
யாகாவாராயினும் நானோகாக்க காவாக்கால் சோகாப்பர்
வரலாற்று இழுக்குப் பட்டு.
புதுக்குரல்
கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா டீ நிறுவனத்தின் பொதுக்குழுவில் கலந்துகொண்ட ரத்தன் டாடா சிங்கூரை நினைத்து கொதித்தெழுந்துவிட்டார். ரூ.ஆயிரத்து 500கோடி முதலீடு செய்தாயிற்று. இதனால் அரசியல்வாதிகளுக்கு அடிவருடுவோம் என்று நினைக்க தேவையில்லை. அங்கிருந்து மாற்றுவதற்கு தயார். ஊழியர்களின் நலன் முக்கியம். தினமும் போலீஸ் பாதுகாப்போடு கார் தயாரிப்பது முடியாத காரியம் என்று தெரிவித்துள்ளார்.
ரூ.ஒருலட்சத்தில் கார் என்பது அமரர் ராஜிவின் கனவு. அவரது கனவில் தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப துறைகளில் நாடு உச்சநிலை அடைவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு இன்று பலன்களை சுவைத்து வருகிறோம். கார்களை வேகமாக ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அவருக்கு நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட்டுக்குத் தகுந்த கார் வேண்டுமென்பதில் பெருவிருப்பம். அதை கொஞ்சம் நிறைவேற்றியது மாருதி. நானோ முழுக்க முழுக்க ராஜிவின் கனவை மெய்ப்படுத்தும் வாகனம்.
நானோ அறிமுகப்படுத்தப்பட்டதும் உலகம் வியந்தது. ஒருலட்சத்தில் முடியவே முடியாது., எல்லாம் ப்ளாஸ்டிக்., சுற்றுச்சூழல் பிரச்னை வரும்., கேஸ் வாகனம்தான் என்றெல்லாம் பூச்சாண்டி தொடர்ந்தது. எல்லாவற்றையும் முறியடித்தார் ரத்தன் டாடா.
சிவப்பு பூமியிலிருந்து பிங்க்காக நானோவை கொண்டுவர பணிகள் துவங்கியது. ஒரு லட்சத்தில் முடிக்கவேண்டுமென்றால் கார் உபகரணங்களும் ஒரே இடத்தில் தயாராகவேண்டிய நிர்ப்பந்தம். ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டன. தொழிற்சாலை உருவாகியது பிரச்னையும். விவசாயிகளை திரண்டு போராடியதில் உள்ளாட்சியில் வென்றவர்கள் மீண்டும் திரண்டுள்ளனர். நிலம் அபகரிக்கப்படுகிறது., உரிய தொகை தரவில்லை. நிலத்தை திருப்பித்தா என்பதே முழக்கம்.
நிலம் அபகரிப்பு எதுவுமில்லை ஒவ்வொருவரிடமும் செய்யப்பட்டிருப்பது ஒப்பந்தமே. திருப்பித்தந்தால் தொழில வளாகம் அமைப்பதில் சிக்கல். ஒப்பந்தமிட்டு வாங்கிய நிலத்தை திருப்பித்தர முடியாது என்கிறது உச்சநீதிமன்றம். பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. போராட்டத்திற்கு தலைமை வகிப்போருக்கும் பலமுறை விளக்கியாயிற்று.
பின் ஏன் போராட்டம்?
31ஆண்டுகால சிவப்பு அரசாங்கத்தை குருதியால் நிறம் மாற்றலாம் என்ற நினைப்பா??
நானோ கார் பாரதத்தின் பெருமை.
போராட்டக்காரர்கள் இதனை உணரவேண்டும்.
டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்கள்., இந்தியர்கள் ஒவ்வொருவரும் இதனை உணரவேண்டும். ஒத்துழைக்க வேண்டும்.
அக்டோபரில் நமது சாலைகள் நானோவால் நிறைய வேண்டும்.
*****
டாடா டீ நிறுவனம் 45நாடுகளில் 43பிராண்டுகளை விற்பனை செய்துவருகிறது. கடந்தாண்டு ரூ.4ஆயிரத்து432கோடிக்கு வியாபாரம் செய்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவில் அதிக விற்பனைக்காக பல நிறுவனங்களை வாங்கும் யோசனையில் உள்ளது. ப்ரீமியமாக பல பெயர்களில் டீ, காபி விற்பனை துவக்கவுள்ளது.
Sunday, August 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment