Monday, December 1, 2008

காத்திருப்பு!

ற்றியது தெரியாது பரவும் தீயை பார்ப்பதும், மரணஓலத்தை கேட்பதும், உயிரைக் குடிப்பதையுமே லட்சியமாகக்கொண்ட நாய்களுக்கும், நரிகளுக்கும் திறந்தவீடாகிவிட்டது தேசம். மும்பை துயரத்தில் மண்காக்க மண்ணில் மறைந்த மறவர்களுக்கும், விருந்தினருக்கும், அறியாமக்களுக்கும் அரைநிமிட அஞ்சலி.

30.........20.........10........1.

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பை. இயற்கை எவ்வளவு சீறினாலும் எதிர்கொண்டு மாநில வேற்றுமையில்லா மக்களால் தினமும் வளம்பெற்று வளரும் நகரம். தீவிரவாதிகள் கண்களை உறுத்த ஜூலை, செப்டம்பர் சாம்பிள் தாக்குதல்கள். விழித்துக்கொள்ளவில்லை. விளைவு, கடந்தபுதன் இரவு கடல்வழி புகுந்த தீவிரவாத கும்பலின் அட்டூழியத்தால் அரபிக் கடற்கரையில் கலங்கரையாக நின்றுகொண்டிருந்த தாஜ், சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், காமா ஆஸ்பத்திரி ஆகியவற்றில் நமது உடல், பொருள் சேதம். கைகோர்த்து வந்த ஏழு படைகளிலும் உயிர் துறந்தவரில் மகாராஷ்டிர மைந்தர் யாருமில்லை. குண்டுச்சட்டி தாக்கரேக்களை கவனிக்க மும்பைக்காரா காத்திருக்கிறார்கள்.

தேர்தல் நெருங்குவதால் தாராளமய பொருளாதாரத்தில் அனுபவம் வாய்ந்த தன்னைப்போல் பிறரை நம்ப பிரதமர் எண்ணவில்லை. எண்ணித்துணிந்து எடுத்துவிட்டார் நிதித்துறையை. உள்துறைக்கு பெயர்ச்சியாயிருக்கிறார் ப.சிதம்பரம். 1986ல் உள்நாட்டு பாதுகாப்பு இணையமைச்சராக பணியாற்றி காலிஸ்தானை காலிசெய்த அனுபவம் பெயர்ச்சிக்கு காரணம். புதிய பதவியால், அளவற்ற அதிகாரத்தால் இலங்கை ராணுவத்தின் பசிக்கும் மாற்றுஉணவு தரலாம், ப.சி. மனதுவைக்கவேண்டும். தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.

மும்பை துயரத்தால் மிகவும் பாதிப்பு அந்நிய முதலீடு. சந்தையின் திசையை நிர்ணயிக்கும் பெரியமீன். இந்நிதியாண்டின் முதல் 6மாதத்தில் 17பில்லியன் டாலர் அந்திய முதலீடு. கடந்தாண்டைவிட 137சதவீதம் அதிகம். செப்டம்பரிலிருந்து படிப்படியாக குறைந்தது. மீண்டும் குவிக்க நிதி மற்றும் நிதி சார்ந்தசேவைகள், மீடியா மற்றும் பலதுறைகளில் கதவுகளை அகலத்திறந்தால், பிராண்ட் மும்பையை மீண்டும் நிமிர்த்தினால் சாத்தியம். பங்குச்சந்தையும் காத்திருக்கிறது.

No comments: