Wednesday, August 27, 2008

சின்னத்திரை கிண்ண போட்டி


ஹாலிவுட் படங்களில் உயர்ந்த கட்டடங்களில் பார்த்த சின்னச்சின்ன கிண்ணங்கள் நம் ஊரில் 1980களில் மிகப்பெரியதாக வந்தது.

வீட்டில் ஆன்டெனாவை காக்கை குருவியிடமிருந்து பாதுகாத்து டிகிரி சுத்தமாக்கி டிடி தெரிவதற்குள் நிகழ்ச்சி முடிவுப்பகுதிக்கு வந்திருக்கும்.

களைத்துப்போனவர்கள் கையில் கேபிளை கொடுத்து பல சேனல்கள் ஒளியும்ஒலியுமாய் பார்க்க சொன்னார்கள். இன்று சின்னக்கிண்ணமே டிடிஹெச்&டைரக்ட் டூ ஹோம் என்று விற்பனையில்.

இந்தியாவில் அரசியல் கட்சிகள் இலவச டிவி வழங்குமுன் இருந்த டிவிக்கள் எண்ணிக்கை 120மில்லியன். இவற்றில் இப்போது டிடிஹெச் இணைப்பில் உள்ளவை 7மில்லியன்.

டிடியின் டிஷ் தவிர, தனியார் நிறுவனங்களில் டிஷ் டிவி. இதைத்தொடர்ந்து டாடா ஸ்கை, சன் டிடிஹெச். களத்தில் புதிதாக அம்பானியின் பிக் டிவி. 300சேனல். 30ல் சினிமா. எம்பெக்4 தொழில்நுட்பம் என்கிறார்கள்.

டிஷ்டிவி இரட்டைச் சலுகை அறிவித்துள்ளது. டாடாஸ்கை விடியோ ரிகார்டிங் வசதிகொண்டது. சன் குறைந்தகட்டணத்தில் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது.

அடுத்த வருடத்தில் நாங்கள் நம்பர் ஒன்றாக வருவோம். மார்க்கெட்டில் 40சதவீதம் எங்கள் கையில் என்கிறார் பிக். விளம்பர பட்ஜெட் ரூ.150கோடி.

இந்தியாவில் ஒரு டிஷ் தரும் லாபம் மாதம் ரூ.140. இந்த அளவை எட்டவும், அதிகரிக்கவும் ஒளிபரப்பில் புதுமை புகுத்தப்பட்டு வருகிறது.
டாடா புண்ணிய ஸ்தல விசேஷங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. பிக் உள்ளூர் சேனல்களை பேக்கேஜ் கட்டணத்தில் ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளது.

டிடிஹெச் சேவைக்கான லைசென்ஸ் பெற்றுள்ள ஏர்டெல், விடியோகான் தீபாவளிக்குள் சேவையை துவக்கும்.

கேபிள்காரர்களிடமிருந்து பெரும் சேவையையே பெருமைமிகு சேவை என நம்மக்கள் நினைத்து வருகின்றனர்.
வேண்டிய நேரம் பணம் கட்டலாம். டீ செலவுக்கு ரூ.10 எடுத்துக்கொண்டும் கட்டலாம். அவசரத்தேவைக்கு கந்துவட்டிக்கு பணம் பெறலாம். உள்ளூர் விஐபியை பார்க்க உதவியாக இருப்பார் என்பவை முக்கியமான காரணங்கள்.

கேபிள்காரர்கள் மேலும் வளர புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது ஹிட்ஸ். உரிய அனுமதிபெற்று மக்களிடம் ஹிட்டாவதற்கு சிறிது காலம் பிடிக்கும். ஒவ்வொரு டிவியிலும் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கேற்ப பணம் கட்டும் வசதியே ஹிட்டின் சிறப்பு. இந்நுட்பத்திற்கு கேபிள்காரர்கள் உபயம் நிச்சயம் வேண்டும்.

லவச டிவிக்களை தரும் தமிழகமுதல்வர் பசுவை கொடுத்துவிட்டேன். கட்டுவதற்கு கயிறா தரமாட்டேன் என்றார். சொல்வதை செய்பவர் அரசு கேபிள் துவக்கிவிட்டார். இதை மாதிரியாகக் கொண்டு டிஷ் கம்பெனிகளும் இணைப்புடன் டிவி தருவது குறித்து பரிசீலிக்கலாம்.

ங்குச்சந்தையில் டிஷ் டிவி, சன்டிவி பட்டியலிடப்பட்டுள்ளன. பிக்டிவி 20சேனல்கள் துவங்கியதும் தனிநிறுவனமாக சந்தையில் இடம்பிடிக்கும்.

No comments: