Monday, August 25, 2008

மில்லியன் நாளிதழ் தினகரன்

கற்க கசடற கற்றபின் களித்திருக்க
புதுக்குரல்

படிப்பவர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம். விற்பனையில் 10லட்சங்களை தாண்டிய பெருமை தினகரன் நாளிதழுக்கு கிடைத்துள்ளது. இன்றைய விற்பனை 10லட்சத்து 12ஆயிரத்து 243 பிரதிகள். 2006ல் புதிய அவதாரம் எடுத்த தினகரன் உள்ளூர் செய்திகளுக்காக தினமும் 4பக்கங்கள் ஒதுக்கி வருகிறது. வணிகம், உலகம் திரை செய்திகளுக்காக தனித்தனிப்பக்கம். விலையும் ரூ.இரண்டே.

ஏழு இலக்கத்தில் நாளிதழ் விற்பனையை அதிகரித்துவிட்ட சந்தோஷத்தில் கலாநிதி மாறன் புதிய சிகரங்கள் தொடவிருப்பம் தெரிவித்துள்ளார்.

யானை வளர்ப்பதும் நாளிதழ் நடத்துவதம் ஒன்றே. யானை நின்றால்தான் மதிப்பு., தீனிக்கும் மாளாத செலவு. செய்திகளை தாங்கிவரும் தாள் விலை கடந்த 6மாதங்களில் 50சதவீதம் அதிகரித்துள்ளது. பத்திரிகை சங்கம் தாள் நுகர்வை குறைக்க அறிவுறுத்தின. வாசகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் பத்திரிகைகள் பக்கங்கள் குறைப்பை தவிர்க்கின்றன. போதாக்குறைக்கு போட்டி.

விற்பனை அதிகரிக்க., விளம்பர வருவாய் அதிகரிக்கும் என்ற ஆர்வம். மாநிலஅளவில் கோலோச்சிவந்த பத்திரிகைகள் கடல்கடந்தும் பதிப்பாகின்றன.

மலையாள மனோரமா பக்ரைன், துபாயிலும் பதிப்பிக்கப்படுகிறது. தமிழக நாளிதழ்களும் கரைகடக்க முடிவெடுத்துவிட்டன. தினகரன் மும்பை பதிப்பை துவக்கவுள்ளது. தமிழ்பேசும் உள்ளங்கள் வாழுமிடங்கள் எல்லாம் தினகரன் கதிர் பரப்பட்டும்.

****

ஆங்கில நாளிதழ்களில் வடக்கு, தெற்கு என்று கோலோச்சுகிறது டைம்ஸ் ஆப் இந்தியா. கர்நாடகா, மும்பை, டில்லியில் எட்டமுடியாத வளர்ச்சி. சென்னையிலும் எட்டிப்பிடிக்க முயல்கிறது.

ஹிந்துவின் பாரம்பரிய வாசகர்களை ஈர்ப்பார் யாருமில்லை. க்ரானிக்களின் வாசகர்வட்டமே தனி. எக்ஸ்ப்ரஸ் புதுச்சட்டை போட்டுப் பார்க்கிறது. புதிய போட்டியாளர் டிஎன்ஏ. இந்துஸ்தான் டைம்ஸ் நேரம் பார்த்துக்கொண்டுள்ளது.

வாசகர்களுக்கோ எடுத்த பேப்பரை படிப்பதா.,புரட்டுவதா என்ற குழப்பம்.

***

மீடியா பங்குகளில் டி.சி.ஹெச்.எல், ஹெச்.டி.மீடியா, ஜாக்ரன், சகாராஒன், சன் டிவி, டிவி டுடே பதிப்புத்தொழில் தொடர்புடையன.

ஸ்டாரின் ஸ்டார் ரூபர்ட்முர்டாக் சமீபத்திய விஜயத்தின்போது பதிப்புத்தொழிலில் அந்நிய முதலீட்டை 75சதவீதம் உயர்த்த கோரியுள்ளார். மத்தியஅரசு பரிசீலித்துவருகிறது. இப்பங்குகளை நீண்டகாலத்திற்காக வாங்கி பயனடையலாம்.

No comments: