Thursday, August 28, 2008

ஒரு நல்ல செய்தி!

ங்குச்சந்தையைப் போன்றே இயங்கும் கமாடிட்டி சந்தையில் விளைபொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படுகிறது.

1993ல் அமைக்கப்பட்ட காப்ரா குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு 1970ல் தடைசெய்யப்பட்ட முன்பேர வர்த்தகம் எனப்படும் பியூச்சர்ஸ் டிரேடிங் இந்தியாவில் மீண்டும் துவங்கியது. இதற்காக 3சந்தைகள் இயங்கிவருகின்றன. ஆன்லைன் முறையில் மு.வ. சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இடைத்தரகர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பொறுக்கவில்லை., பொங்கி எழுந்தனர். ஆன்லைன் வர்த்தகமே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று ஒரேகோஷம். விளக்கியது அரசு. விளங்கவில்லை அவர்களுக்கு.

மு.வ. சந்தையிலிருந்து அரிசி,உளுந்து உள்ளிட்டவற்றை இந்நிதியாண்டு துவக்கத்தில் தடை செய்தது. மேமாதத்தில் உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, சோயா எண்ணை, ரப்பருக்கு தடை.

பொருட்களின் விலை மேலும் உயர்ந்ததே தவிர குறையவில்லை. இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்திய மேலாண்மை பயிற்சிமையம் உள்ளிட்ட பல கல்விநிறுவனங்கள் விலைவாசி உயர ஆன்லைன் வர்த்தகம் காரணமில்லை என தெரிவித்துள்ளன. தடை தொடர்ந்தாலும் மு.வ. 40சதவீதம் வரை வளர்ச்சியடைந்தது.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஒருகிலோ உருளைக்கு கிலோ ரூ.5 உத்தரவாதமிருந்தது சந்தைநிலையை அனுசரித்து அதிகரிக்க வாய்ப்பு, வர்த்தகம் முடிந்ததுமே வங்கிக்கணக்கில் பணம்.எதிர்கால விலையை நிர்ணயிக்கும் உரிமையும் விவசாயிகளுக்கே.

தடைக்குப்பின் சந்தையில் உருளை விலை கிலோ ரூ.2.50. பணப்பட்டுவாடா செய்ய 3மாதம் தாமதமாகிறது. நஷ்டம் விவசாயிகளுக்கே.

கமாடிட்டி சந்தை கண்காணிப்பு அமைப்பு பார்வார்ட் மார்க்கெட்டிங் கமிஷன் மீண்டும் உருளை, கொண்டைக்கடலை, ரப்பர், கயறு, சோயா எண்ணை ஆகியவற்றில் முன்பேர வர்த்தகத்தை செப்டம்பர் இறுதியில் துவக்குகிறது.

முன்பேர வர்த்தகத்தில் முதலிடம் வகிப்பவை தங்கம், வெள்ளி, ப்ளாட்டின உலோகங்கள். மு.வ. சந்தையின் இந்தாண்டு இலக்கு ரூ.60லட்சம் கோடி.

No comments: