கரன்சி வர்த்தகம்
தேசிய பங்குச்சந்தையில் முக்கிய தினம் கடந்த வெள்ளிக்கிழமை. சந்தையில் கரன்சிகளில் முன்பேர வர்த்தகம் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் துவக்கப்பட்ட நாள்.
2000ம் ஆண்டில் டெரிவேட்டிவ் வர்த்தகம் ஷேர்களில் துவங்கியது. தற்போது கரன்சிகளில் முன்பேரங்களை நடத்தலாம். இதற்காக செப்டம்பர் 2008 துவங்கி ஆகஸ்ட் 2009வரையிலான காண்டிராக்டுகள் கிடைக்கும். ஒரு புள்ளி ஏற்ற இறக்கம் 25காசுகள் ஏற்ற இறக்கத்தை குறிக்கும்.
கரன்சி வர்த்தகம் காலை 9மணிக்கு துவங்கி மாலை 5மணிவரை செய்யலாம். இதற்காக உங்கள் புரோக்கரிடம் தனி கணக்கு துவங்கி தனி அடையாளம் பெறவேண்டும். போட்டியில்லாததால் தரகுக் கட்டணம் கொஞ்சம் அதிகம்.
ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர், வெளிநாட்டுக்கு செல்பவர்கள் கரன்சி வர்த்தகத்தால் அதிக பலன் பெறலாம். அந்நியச்செலாவணி ரிஸ்க்கை குறைக்க பெரிதும் உதவும்.
இவ்வர்த்தகம் ரூபாயிலேயே நடைபெறுவது கூடுதல் வசதி.
கடந்த வெள்ளி செப்டம்பர் 2008 ஒப்பந்தத்தில் டாலருக்கான விலை ரூ.43.83முதல் ரூ.44.02வரை நடைபெற்றது. ஆகஸ்ட் 2009 ஒப்பந்தத்தில் டாலர் விலை ரூ.45.05 என்று முடிவடைந்தது. முதல்நாளில் முதலீட்டாளர்கள் 70ஆயிரம் ஒப்பந்தங்களில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
தேசிய பங்குச்சந்தையில்—என்எஸ்ஈ ல் மட்டுமே துவக்கப்பட்டுள்ள இந்தவசதி விரைவில் மும்பை பங்குச்சந்தையிலும், எம்சிஎக்ஸ் துணை நிறுவனமாகவுள்ள எம்சிஎக்ஸ் ஸ்டாக்மார்க்கெட்டிலும் விரைவில் துவங்கும். இதனால் இச்சந்தைகளில் வால்யூம் அதிகரிக்கும், லாபமும்.
இந்திய தொழில் துறையின் பிதாமகர்களில் ஒருவரான கிருஷ்ணகுமார் பிர்லா தனது 90வது வயதில் சொர்க்கமடைந்துள்ளார். தொழிலதிபர்,பத்திரிகையாளர்,சிந்தனையாளர்,பேச்சாளர்,பாராளுமன்ற உறுப்பினர்,கல்வியல் அறிஞர்,தந்தையார் என நீளும் பட்டியலில் எல்லாவற்றின் முன்னும் சிறந்த சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பணவீக்கத்தால் நாடு கஷ்டப்பட்டபோது பிரதமர் இந்திராவிடம் அரசின் கெடுபிடிகளை குட்டிக்காட்டி நிவாரண வழியை வலியுறுத்தியவர். இவரது சுயசரிதையான ப்ரஸஸ் வித் ஹிஸ்டரி இந்தியாவின் தொழில் வரலாறு. புதிய தலைமுறையினருக்கு பாடம்.
Monday, September 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment