Sunday, September 7, 2008

3.2..1...சக்சஸ்!

ஜூலையில் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றிபெற்றதும் பிரதமர் நம்பிக்கையுடன் பேசினார், அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் நாம் பல தடைகளை தாண்டவேண்டியுள்ளது, தாண்டுவோம். முக்கியத்தடையை தாண்டியாகிவிட்டது.

வியன்னாவில் நடைபெற்ற அணுப்பொருள் சப்ளை நாடுகள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுஒப்பந்தத்திற்கு விலக்களித்து ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளன.

அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாது நமது வாக்குறுதிகளின் பேரில் காந்தி தேசமது என்ற நம்பிக்கையில் 45நாடுகள் ஒருமனதாக ஆதரவு தந்துள்ளன.

எதிர்கட்சிகளின் குரல் நாட்டின் அக்கறையை ஓங்கிஒலிக்கிறது. நமது அணுசக்திக்கு, ஆராய்ச்சிக்கு என்ன குறை என்று கேட்டுள்ளனர்.
நமது பெருமையை உலகறியச் செய்வதற்கான பாஸ்போர்ட்டை அணுப்பொருள் சப்ளையர்கள் தந்துள்ளனர். விசா கிடைக்கவேண்டியது அமெரிக்காவில்.

செப்.22ல் துவங்கி அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு சென்று பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் நன்றியை தெரிவிக்கவுள்ளார். அமெரிக்க பார்லி.யிலும் அணுஒப்பந்தம் நிறைவேற அனைத்து கட்சியினரையும் சந்தித்து கேட்டுக்கொள்வார்.

அணுசக்திக்கான கனநீர் கலன்அமைத்தல், தோரியம் தொழில்நுட்பம் இவற்றில் இந்தியாதான் என்றும் நம்பர்.1. இவற்றின்மூலம் கோடி கோடிகளை குவிக்கலாம்.

தோரியம் நீங்கலான பிற அணுஎரிபொருள்கள், தொழில்நுட்பங்களை வெளிநாட்டிலிருந்து பெறலாம். அவற்றை அணுசக்தி நாடுகளுடன் இணைந்து மேம்படுத்தலாம்.

இந்தியாவில் தனியார் அணுஉலைகள் நிறுவி அடுத்த ஐந்தாண்டில் 3ஆயிரத்து300 மெகாவாட் கூடுதலாக மின்சார உற்பத்தி செய்யலாம்.

எல்லோருக்கும் ஏற்றது அணுவின் அழிவை அழிக்கவேண்டுமென்பதே. இந்தியாவால் நிச்சயம் அது முடியும்.

அணுமின்சார உற்பத்திக்காக ரிலையன்ஸ் சகோதரர்கள், எல் அண்ட் டி, டாடாபவர், ஜிஎம்ஆர், பாரதமிகுமின் நிறுவனம், ஜி.ஈ எனர்ஜி ஆகியவை தயாராகின்றன.

ரு நல்ல செய்தியில் கூறியிருந்தபடி செய்தி இல்லை. விலக்கப்படவிருந்த உருளை, ரப்பர், கொண்டைக்கடலை, சோயா எண்ணைக்கான தடை மேலும் 3மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு மாதம் ரூ.15ஆயிரம் கோடி.

No comments: