பங்குச்சந்தையில் பிக் பேங்க்
பிரபஞ்சம் உருவாகியது தொடர்பாக இயற்பியல் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்ட தியரி பிக் பேங்க் தற்போது சோதனை நடத்தப்பட்டு நிரூபணத்திற்கு தயாராகிவருகிறது. இதனால் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சர்ச்சையும் நிலவுகிறது.
பிரபல இயற்பியல் விஞ்ஞானி, காலத்தின் வரலாற்றை எழுதிய ஸ்டீபன் ஹாக்கின்சிடம் பங்குச்சந்தையில் பிரளயத்தை ஏற்படுத்தும் பிரபஞ்சம் அழியும் போன்ற செய்திகளை வெளியே சொல்லாதீர்கள் என்று பொருளாதார புலிகள் கோரிக்கை வைத்தனர். அவர் பிரபஞ்ச அழிவுக்கு பல நூறு டிரில்லியன் வருடங்கள் காத்திருக்க கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டு எல்லைப்பகுதியில் பிரபஞ்ச சோதனை நடைபெறுவதால் கருப்புப்பணம், கருப்புப்பங்கு முதலைகளுக்கு அடிவயிற்றில் கிலி. பங்குச்சந்தையில் வலி.
கடந்தவாரம் புதன், வியாழன், வெள்ளி என இந்தியச்சந்தைகளில் வீ....ல் வீழ்ச்சி. ப்ளூசிப் பங்குகளின் இழப்பு 55ஆயிரத்து 600கோடி ரூபாய். இதுதொடர வாய்ப்புள்ளதாக நிப்டி சார்ட்டின் ஹெட் அண்ட் ஷோல்டர் வடிவம் தெரிவிக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் தேறிவருகிறது. உணவுப்பொருட்கள் 4.6, சிமெண்ட் 2.0 இயந்திர உபகரணங்கள் தயாரிப்பில் 5.5 சதவீதங்களில் விலைஉயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
பணவீக்கமும் 12.10சதவீதம். ஆனால் சந்தைப்போக்கு கவலையளிப்பதாக உள்ளது.
சந்தையில் இந்நேரம் வர்த்தகர்களுக்கான நேரம், முதலீட்டாளர்களுக்கானதல்ல.
கச்சா எண்ணெய் விலை ஓ போட வைக்கிறது பீப்பாய் விலை 98.55டாலரை தொட்டுள்ளது. உற்பத்திக்குறைப்பை ஒபெக் நாடுகள் அறிவித்தாலும் விலை குறைந்துவருவது ஓர் ஆச்சர்யம். அதன் நியாயவிலை 85டாலர்/பீப்பாய் தொடவும் வாய்ப்புள்ளது. காரணம் டாலடிக்கும் டாலர்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று. தமிழகத்தில் ஏழைகள் மலர்ச்சியடைய ஒரு ரூபாய் கிலோ அரிசி திட்டம் துவக்கப்படுகிறது. மலிவுவிலை மளிகை திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளின் மனமலர்ச்சியன்றோ பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சி.
Monday, September 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment