Thursday, September 4, 2008

நிறுவனங்களின் சந்தைக் காய்ச்சல்

ணவீக்கம், பங்குச்சந்தையில் புதிய பங்குகளுக்கு ஏற்பட்ட சரிவால் விளைவு- பல நிறுவனங்களுக்கு சந்தைக்காய்ச்சல்.

பொதுத்துறை நிறுவனமான மாருதியின் பங்கு வெளியீடு ஒரு மைல்கல். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல நிறுவனங்களின் பங்குகள் வெளியிடப்பட்டன. 2003-07வரை சந்தையில் புதிய நிறுவனங்களின் பங்களிப்பு 30சதவீதம்.

2008 ஜனவரியில் துவங்கி ஆகஸ்ட் வரை சந்தைக்கு வந்த நிறுவனங்களின் மதிப்பு உற்பத்தி:52.4, நிதிச்சேவை:50.1, ரீடெய்ல்:46.7, மின்சக்தி:39.5, அடிப்படைக் கட்டமைப்பு:20.5 என்று துறைவாரியாக சரிந்ததில் ஐபிஓ வெளியிடவிருந்த நிறுவனங்களுக்கு வந்தது சந்தைக்காய்ச்சல்.

ரூ.16ஆயிரத்து 539கோடி திரட்டவிருந்த 22நிறுவனங்கள் தாமதித்தன. வெளியீட்டு உரிமம் ரத்தாகியுள்ளது. எம்சிஎக்ஸ், யுடிஐ அசட் போன்ற பிரபல நிறுவனங்களும் இதில் அடக்கம்.

ந்திய ரிசர்வ்வங்கியின் 22வது கவர்னர் டாக்டர். சுப்பாராவ் பதவியேற்கிறார்.
உலகவங்கி, ரிசர்வ்வங்கி, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு, நிதியமைச்சகம் இவற்றில் பணியாற்றிய அனுபவம் ரிசர்வ்வங்கியை வழிநடத்த கைகொடுக்கும்.

அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக பென் பெர்னாக் பொறுப்பேற்றபோது அவர்முன்னுள்ள சவால்கள் குறித்து உலகமே விவாதித்தது.
இந்தியாவின் பொருளாதார முடிச்சையும் சுப்பாராவ் சுலபமாக தீர்ப்பார் என்ற நம்பிக்கையுடன் வரவேற்கலாம்.

சிங்கூருக்கு நானோ சொல்கிறது டாடா. அவசரமில்லை., விடியோகான் தூத் சொல்லும் யோசனைப்படி விவசாயிகளிடம் டாடாமோட்டார்ஸ் நேரில் அணுகி பிரச்னையை தீர்க்க வாய்ப்புள்ளது. கவர்னரை மத்தியஸ்தராக கொண்டு தீர்வுகாணலாம்.

மத்தியஅரசு விவசாயிகள் மீது கருணைகொண்டு பிரச்னை தீயிலிருந்து விலகியிருப்பதை தவிர்த்து நானோ மீது பெருமை கொண்டு தீர்வுக்கு உதவவேண்டும்.

No comments: