Friday, October 3, 2008

நாக்க மூக்க...நாக்க மூக்க...


ந்திய முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். சந்தையில் கரடியின் நாக்கமூக்க நடனம் ஓய்ந்துள்ளது. அமெரிக்காவின் 777 சரிவும் நம்மை ஒன்றும் செய்யமுடியவில்லை. பெருமை கொள்ளலாம். இனி காளையின் நாக்கமூக்க நடனம்.

சந்தையின் இந்த சர்ப்ரைஸ் தொடர வேண்டுமானால் அரசு சந்தைக்கு சில ப்ரைஸ்கள் தரவேண்டியுள்ளது. செபியின் பற்களை பலப்படுத்தவேண்டும். பிராவிடண்ட் பன்ட், மியூச்சுவல் பன்ட் தொகைகளை தாராளமாக சந்தையில் கொட்ட வேண்டும். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் குறித்தகாலம் வரை சந்தை முதலீட்டை திரும்பப்பெறக்கூடாது என்ற நிபந்தனை விதிக்க வேண்டும்.

திவால் நிறுவனங்களின் உதவிக்கான திட்டம் அமெரிக்காவில் ஏற்கப்பட்டது, பொருளாதார புள்ளிவிவரங்கள் அறிவிப்பில் புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது., நாட்டின் ஆறில் ஒரு நிறுவனம் மட்டுமே சோடையாக உள்ளது., ஸ்டீல் நிறுவனங்கள் விலைகுறைத்துள்ளது., ரியல்எஸ்டேட் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு தளர்வு போன்றவை சந்தைக்கு நல்லசகுனங்கள்.

பணவீக்கம், பயமுறுத்தும் தேர்தல் காளைக்கு அயர்ச்சி தரும் விஷயங்கள்.

தேசிய பங்குச்சந்தையை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையிலும் கரன்சி வர்த்தகம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக பிஎஸ்ஈ கரன்சி டெரிவேட்டிவ் எக்சேஞ்ச் என்ற தனிப்பிரிவு இயங்குகிறது. ஒரு கரன்சி காண்டிராக்டின் குறைந்தபட்ச மதிப்பு ஆயிரம் டாலர்.

வாழ்வுரிமை விருது எனப்படும் மாற்று நோபல் பரிசு நாகப்பட்டிணத்திலுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதிக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க செய்தியாளர் அமி, சோமாலியா சமூகஆர்வலர் ஆஷாஹாகி, ஜெர்மன் டாக்டர் மோனிகாவுடன் தமிழக தம்பதி விருது தொகை ரூ.1.34கோடியை பகிர்ந்து கொள்கின்றனர்.

பூமிதான இயக்க ஆர்வலரான ஜெகன்னாதன் ஜமீன்தார்களிடமிருந்து நிலம் பெற்று தாழ்த்தப்பட்ட விவசாய கூலிகளுக்கு வழங்கி விவசாயத்தை நிர்வகித்து வருவதற்காக கிடைத்துள்ளது பரிசு.

No comments: