ஆம். அவரால் முடியும்
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் உசேன் ஒபாமா. 47வயதில் அவரது நடை உலகத்தின் அனைத்து சுகதுக்கங்களையும் அனுபவித்தவரின் நடைபோன்று முதிர்ச்சியாகவுள்ளது. வெள்ளைச்சட்டையும் அதன் மீது கருநீலகோட்டும் ஒரு சிம்பாலிக்காக வெள்ளையர்களை அரவணைக்கவந்த கருப்பன் என்கிறது. பேச்சின்போது வலதுகையை முநதும் இடக்கை இருதயப்பூர்வமானவராக அவரை காட்டுகிறது. கலப்பினத்திற்கே உரிய நிற உடலும் அதன்மொழியும் எல்லோரையும் கவர்ந்து அவரது பேச்சை கவனிக்க வைக்கின்றன. அவரது கண்களில் சுடர்விடுகிறது எதிர்கால அமெரிக்கா.
பணம், சொகுசு,அந்தஸ்து என்பதை மட்டுமே வாழ்வாக கொண்ட அமெரிக்கர்களை வழிநடத்தவந்த தலைவராகவே அவர் தோன்றுகிறார். ஒரு அமெரிக்க குடும்பத்தின் கடன்தொகை 80ஆயிரம் டாலர். தேசத்தின் பொருளாதாரம் திரும்புமிடமெல்லாம் பலவீனம், இயற்கைச்சீற்ற பாதிப்பு, தீவிரவாதம், அணுக்கொள்கை என்று அவர் சந்திக்கவேண்டிய சவால்கள் எங்கும். தங்களது மரபுகளை மறந்துவிட்டு மூலதனத்தின் பிடியில் கட்டுண்டு அடிமையாக கிடக்கும் வெள்ளை மக்களுக்கு ஜனநாயகத்தின், சுதந்திரத்தின் பெருமைகளை உணர்த்தவந்த ரட்சகராக கூறுகிறார் ஆம் நம்மால் முடியும். நம்மையும் நம்பிக்கை கொள்ளச்செய்கிறார் ஆம். அவரால் முடியும்.
சிறிய நிறுவனங்களுக்கான பங்குச்சந்தை அமைப்பது குறித்து செபி வரைவறிக்கை வெளியிட்டுள்ளது.ரூ.100கோடி மதிப்பில் தனிச்சந்தை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான எக்சேஞ்ச்களை ஒருங்கிணைத்து இச்சந்தையை அமைக்கலாம். இதை செபி பரிசீலிக்கவேண்டும்.
இரும்பு உற்பத்தித்தொழில் சரிவைச்சந்தித்து வருகிறது. சீனா இரும்புத்தாது ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. உள்நாட்டிலும் தேவை குறைந்தது. தாதுஉற்பத்தியும், ஸ்டீல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் சாப்ட்வேர் மேம்பாடு, வடிவமைப்பிற்கான சாப்ட்வேர் தொகுப்புகளை கனவுப்பொறி என்ற பெயரில் இலவசவிநியோகம் செய்துவருகிறது. ட்ரீம்ஸ்பார்க் வலைத்தளத்தில் பதிந்தால் வீடுதேடி சாப்ட்வேர் டிவிடிவரும். புதிய தலைமுறையினரை தலைவர்களாக உருவாக்குவதற்காக இப்பணியில் ஈடுபட்டுள்ளோம் என்கிறார் பில்கேட்ஸ். இந்தியாவில் 10மில்லியன் இளைஞர்களுக்கு கனவுப்பொறி கிடைக்கவுள்ளது.
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment